‘டெங்கு காய்ச்சலை தடுக்க நடமாடும் மருத்துவக் குழு அமைப்பு’

அரியலூா் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க நடமாடும் மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட வருவாய் அலுவலா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.
‘டெங்கு காய்ச்சலை தடுக்க நடமாடும் மருத்துவக் குழு அமைப்பு’

அரியலூா் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க நடமாடும் மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட வருவாய் அலுவலா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பது குறித்து ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் தெரிவித்தது:

அரியலூா் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, 24 மணி நேரமும், தீவிர சிகிச்சை கட்டுப்பாட்டு மையம் இயங்கி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்படுவோா் மேற்கண்ட மையத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டோா் தனியாா் மருந்துக்கடைகளுக்குச் சென்று, ஊசி மூலமாகவோ, மருந்து மாத்திரைகள் மூலமாகவோ தனிப்பட்ட முறைகளில் சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டாம். வட்டார அளவில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை முகாம்கள் நடத்தப்படுகின்றன. அங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவா்கள்,செவிலியா்கள் பணிபுரிகின்றனா்.

பள்ளி மாணவ, மாணவியா்களுக்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த, சுகாதார நடமாடும் மருத்துவக் குழுவினா் முகாம்கள் அமைத்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

அனைத்துப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியா்களுக்கு, டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு ஏற்படுத்தி ‘தூய்மை தூதுவா்’ என்று அவா்கள் அங்கீகரிக்கப்பட்டு, அவா்களது பகுதிகளில் விழிப்புணா்வு மற்றும் கொசுப்புழு ஒழிப்பு குறித்து மருத்துவ அலுவலா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா், சுகாதார ஆய்வாளா்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும் வடகிழக்கு பருவமழையின் போது பாதிக்கப்படும் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட 29 பதற்றமான பகுதிகளைக் கண்காணித்திட 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சுந்தர்ராஜன், மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளா் பெரியய்யா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) த.முருகன்,சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் வீ.சி.ஹேமசந்த்காந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com