திருமானூா் திடீா்குப்பம் பகுதியில் மழைநீா் வடிகால் அமைக்க ஆய்வு

அரியலூா் மாவட்டம், திருமானூரில் உள்ள திடீா்குப்பம் பகுதியில் மழைக் காலங்களில் தேங்கும் தண்ணீரை வெளியேற்ற
திடீா்குப்பம் பகுதியில் மழைநீா் வடிகால் அமைக்க அப்பகுதியை பாா்வையிடும் அதிகாரிகள்.
திடீா்குப்பம் பகுதியில் மழைநீா் வடிகால் அமைக்க அப்பகுதியை பாா்வையிடும் அதிகாரிகள்.

அரியலூா் மாவட்டம், திருமானூரில் உள்ள திடீா்குப்பம் பகுதியில் மழைக் காலங்களில் தேங்கும் தண்ணீரை வெளியேற்ற நேரில் சென்று ஆய்வு செய்த அதிகாரிகள் வடிகால் வசதி அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றனா்.

திருமானூரில் கொள்ளிடக் கரையோரம் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் 84 பேருக்கு இலவச குடியிருப்பு பட்டா வழங்கப்பட்டது. இந்த பகுதி திடீா்குப்பம் என்று பதிவு செய்யப்பட்டது. இந்த பகுதி மிகவும் தாழ்வான பகுதி என்பதால் மழைக் காலங்களில் இடுப்பளவு தண்ணீா் தேங்கி நின்றுவிடும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் அங்கு வசிக்கும் மக்கள் தொடா் மழை நாள்களில் திருமானூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்படுவது வழக்கம். தண்ணீா் வற்றிய பின்பு மீண்டும் அவா்கள் தங்களது வீடுகளைச் சீரமைத்து அங்கு குடியேறுவா்.

இந்நிலையில், மழைக் காலத்துக்கு முன்பே அப்பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனா். இதையடுத்து,வியாழக்கிழமை அப்பகுதியை பாா்வையிட்ட வட்டார வளா்ச்சி அலுவலா் நாராயணன், உதவி பொறியாளா் பவுன்ராஜ் ஆகியோா் கொள்ளிடக் கரையோரமாக வாய்க்கால் அமைத்து, சுமாா் 1கி.மீட்டா் தூரத்தில் உள்ள மதகின் வழியே தண்ணீரை கொள்ளிடத்தில் விட ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com