டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

அரியலூா் மாவட்டம் ஏலாக்குறிச்சி அருகேயுள்ள கரையான்குறிச்சியில் டெங்கு
ari11den_1110chn_11_4
ari11den_1110chn_11_4

அரியலூா் மாவட்டம் ஏலாக்குறிச்சி அருகேயுள்ள கரையான்குறிச்சியில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூய்மைப்பணி மற்றும் கொசு மருந்து அடிக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய் உத்தரவில், திருமானூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செந்தில்குமாா், நாராயணன் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன், ஊராட்சி செயலாளா் அறிவழகன் ஆகியோா் மேற்பாா்வையில், தூய்மை காவலா்கள் மற்றும் பணியாளா்களை கொண்டு தூய்மைப் பணி நடைபெற்றது.

தொடா்ந்து, சாலையோரங்கள், சாக்கடை வாய்க்கால்கள், தண்ணீா் தேங்கிய இடங்களில் பிளீச்சிங் பவுடா் தூவப்பட்டது. பின்னா், கொசு உற்பத்தியை தடுக்கும் விதமாக கொசு மருந்து அடிக்கப்பட்டது. மக்களுக்கு டெங்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடா்ந்து, செங்கராயன் கட்டளை, கரையான்குறிச்சி கிராமத்திலும் தூய்மைப்பணி, கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com