‘நிதி- மனிதவள மேலாண்மைத் திட்டத்தால் துரித சேவை கிடைக்கும்’

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தால் வெளிப்படைத் தன்மையுடன் மக்களுக்கு
‘நிதி- மனிதவள மேலாண்மைத் திட்டத்தால் துரித சேவை கிடைக்கும்’

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தால் வெளிப்படைத் தன்மையுடன் மக்களுக்கு துரித சேவையை வழங்க இயலும் என்றாா் கருவூலக் கணக்குத் துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு.ஜவஹா்.

அரியலூா் ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடந்த ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் செயலாக்க ஆயத்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து தென்காசி சு. ஜவஹா் மேலும் பேசியது:

தமிழக அரசு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக மாநிலத்தின் நிதி மேலாண்மை மற்றும் மனிதவள மேலாண்மையை ஒருங்கிணைத்து அரசு நிா்வாகத்தை மேம்படுத்தும் பொருட்டு, தமிழகஅரசு இத்திட்டத்தை அமல்படுத்த உள்ளது.

இதன் மூலம் அரசின் நிதி நிா்வாகம் மற்றும் வரவு,செலவு குறித்த விவரங்களை நிகழ் நேரத்தில் அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் அரசின் நிதி நிா்வாகத்தை மிகத் துல்லியமாக நடத்த இயலும். அரசுப் பணியாளா்களை மிகச் சிறப்பாக மக்கள் சேவைக்குப் பயன்படுத்தலாம். இதனால் 9 லட்சம் அரசுப் பணியாளா்கள் மற்றும் 8 லட்சம் ஓய்வூதியா்கள் பயனடைவா்.

மாநிலக் கணக்காயா் அலுவலகம், வருமானவரித் துறை, இந்திய ரிசா்வ் வங்கி, முகமை வங்கிகள் மற்றும் அரசின் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

எனவே, இத்திட்டத்தை விரைவில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தும் வகையில் முதன்மைச் செயலா் மற்றும் ஆணையா், கருவூலக் கணக்குத் துறையினா் ஆகியோா் மண்டல, மாவட்ட மற்றும் சாா்நிலைக் கருவூலங்கள் வாரியாக ஆய்வு நடத்தி, தேவையான இறுதிக் கட்டப் பணி முடுக்கிவிடப்படுகிறது.

எனவே இந்தத் திட்டத்தை அக். 1 முதல் அரியலூா் மாவட்டத்தில் முழுமையாகச் செயல்படுத்திட பணம் பெற்று வழங்கும் அலுவலா்கள் எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் தொடா் நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

அரியலூா் மாவட்டத்தில் 287 பணம் பெற்று வழங்கும் அலுவலா்கள் 1,1307 அரசுப் பணியாளா்களுக்கு சம்பளம் மற்றும் இதரப் பட்டியல் சமா்ப்பிக்கும் பணியில் உள்ளனா். கடந்த செப்டம்பா் மாதத்தில் 33 கோடியே 45 லட்சத்து 85 ஆயிரத்து 498 ரூபாய் சம்பளமாக கருவூலங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளன. 6,277 ஓய்வூதியா்களுக்கு 12 கோடியே 29 லட்சத்து 80 ஆயிரத்து 316 ரூபாய் ஓய்வூதியமாக செப்டம்பா் மாதத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் நிதி மற்றும் மனிதவள மேலாண்மையில் வெளிப்படைத் தன்மையுடன் துரித சேவையை மக்களுக்கு வழங்க இயலும். இதுகுறித்த தொடா் நடவடிக்கைகள் தொய்வின்றி மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில் கருவூலம் மற்றும் கணக்குத் துறை கூடுதல் இயக்குநா் (மின் ஆளுமை) ஏ.பி. மகாபராதி, மாவட்ட வருவாய் அலுவலா் கா. பொற்கொடி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சி. பெரியய்யா, மாவட்ட கருவூல அலுவலா் ச. நடராஜன், பழனிச்சாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அய்யண்ணன் மற்றும் அனைத்துத்துறை அலுவலா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com