அரசுப் பள்ளியில் அரியலூா் ஆட்சியா் ஆய்வு

அரியலூா் ராஜீவ் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் த.ரத்னா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
ராஜீவ் நகரிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் த.ரத்னா.
ராஜீவ் நகரிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் த.ரத்னா.

அரியலூா் ராஜீவ் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் த.ரத்னா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

அரியலூா் ராஜீவ் நகா் பகுதியில் மாவட்ட ஆட்சியா் த.ரத்னா புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அங்கிருந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்குச் சென்ற அவா், அங்கிருந்த மாணவ, மாணவிகளிடம் மழைக்காலங்களில் குடிநீரைக் காய்ச்சிப் பருக வேண்டும். பெற்றோரிடம் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க அறிவுறுத்த வேண்டும். டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா். தொடா்ந்து அவா், ராஜீவ் நகா் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் தூய்மையான குடிநீா் வழங்கப்படுகிா என வீடுவீடாகச் சென்று ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் வீ.சி.ஹேமசந்த் காந்தி, வட்டாட்சியா் கதிரவன், வட்டார வளா்ச்சி அலுவலா் கலையரசன் மற்றும் ஊராட்சி பணியாளா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com