ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டத்தில், புதிய கல்விக் கொள்கையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளோடு இணைக்கும் முடிவை கைவிட வேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள 17-பி ஒழுங்கு நடவடிக்கைகள், பணி மாறுதல்களை ரத்து செய்ய வேண்டும். 
புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து, 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு, அரசு ஊழியர் சங்க வட்டச் செயலர் சரவணன் தலைமை வகித்தார். ஆசிரியர் கூட்டணி வட்டாரத் தலைவர் நீதிபதி பங்கேற்று பேசினர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ வட்டார ஒருங்கிணைப்பாளர் அனந்தநாராயணன், திருமானூர் வட்டார கல்வி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் சுகிர்தராஜ், ஜயங்கொண்டம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஊராட்சி ஒருங்கிணைப்பாளர் அரங்கநாதன், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட செயலர் சேகர் ஆகியோர் தலைமை வகித்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com