அண்ணா பிறந்த நாள்: அரியலூரில் செப்.15-இல் சைக்கிள் போட்டி

மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி, அரியலூரில் செப்.15 ஆம் தேதி சைக்கிள் போட்டி நடைபெறுகிறது. 

மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி, அரியலூரில் செப்.15 ஆம் தேதி சைக்கிள் போட்டி நடைபெறுகிறது. 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளையொட்டி, அதனை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் சைக்கிள் போட்டிகள் நடத்தப்படுகிறது. நிகழாண்டு மாவட்ட விளையாட்டு அரங்கில் செப்.15 ஆம் தேதி காலை 7 மணிக்கு சைக்கிள் போட்டிகள் நடைபெறவுள்ளது.
போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகள் தங்கள் சொந்த செலவில் மிதிவண்டிகள் கொண்டு வரவேண்டும். சாதாரண மிதிவண்டியாக இருத்தல் வேண்டும். அகலமான கிராங்க் பொருத்தப்பட்ட மிதிவண்டிகளை பயன்படுத்துதல் கூடாது. மாணவ, மாணவிகள் போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே போட்டி நடத்தப்படும் இடத்திற்கு வயது சான்றிதழ்களுடன் வர வேண்டும். 
சாதாரண கைப்பிடி கொண்ட மிதிவண்டியாக இருத்தல் வேண்டும். மிதிவண்டிப்போட்டிகளில் நேரும் எதிர்பாராத விபத்துகளுக்கோ தனிப்பட்ட பொது இழப்புகளுக்கோ பங்குபெறும் மாணவ, மாணவிகளே பொறுப்பு ஏற்கவேண்டும் என்று ஒப்புதல் அளிக்க வேண்டும். சைக்கிள் போட்டியின் தொலைவு விவரங்கள் சைக்கிள் போட்டிகள் நடைபெற இருக்கும் தடங்கள் 15.09.2019 அன்று போட்டிகள் நடைபெறும் முன்பு தெரிவிக்கப்படும்.
போட்டிகள், 13 வயதிற்குள் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் வரையிலும், மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டர் வரையிலும், 15 வயதிற்குள் 9,10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் வரையிலும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் வரையிலும், 17 வயதிற்குள் 11,12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் வரையிலும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் வரையிலும் நடைபெறும்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள், முதல் பத்து இடங்களைப் பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு தரவரிசை சான்றிதழ்களும் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com