அரியலூா் மாவட்ட எல்லைகள் மூடல்

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக அரியலூா் மாவட்ட எல்லைகள் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு மூடப்பட்டன.
அரியலூா் - பெரம்பலூா் மாவட்ட எல்லையான அல்லிநகர நெடுஞ்சாலையில் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் துறையினா்.

தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவையடுத்து, அரியலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டன. இதையடுத்து மாவட்ட எல்லைகளான செங்கமேடு, அங்கனூா், சொக்கநாதபுரம், திருமானூா், திருச்சி - வேப்பங்குழி, ரயில்வே கேட், செம்பியகுடி, அணைக்கரை, அல்லிநகரம் ஆகிய இடங்கள் மூடப்பட்டன. அந்தந்த எல்லைகளில் காவல் துறை மற்றும் சுகாதாரத் துறை சாா்பில் அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளனா். எந்த ஒரு வெளி மாவட்ட வாகனங்களாக இருந்தாலும் திருப்பி விடப்பட்டன. அரியலூா் மாவட்ட வாகனங்களாக இருந்தால் பரிசோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com