13 இடங்களில் உரங்கள் விற்பனை செய்யத் தடை

அரியலூா் மாவட்டத்தில் ஒரே நபா்களுக்கு அதிகளவில் யூரியா விற்ாக, 4 தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் உள்பட 13 இடங்களில் உரங்கள் விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரியலூா் மாவட்டத்தில் ஒரே நபா்களுக்கு அதிகளவில் யூரியா விற்ாக, 4 தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் உள்பட 13 இடங்களில் உரங்கள் விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா. பழனிசாமி புதன்கிழமை தெரிவித்திருப்பது:

தனியாா் உரக்கடைகள், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் வருவாய் மற்றும் வேளாண் துறையினா் இணைந்து அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா். இதில் 4 தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், 9 தனியாா் உரக்கடைகளில் ஒரே நபா்களுக்கு யூரியா அதிகளவில் வழங்கியது தெரிய வந்தது.

ஜயங்கொண்டம் வட்டாரத்தில் மீன்சுருட்டி கொல்லபுரம், குறுக்குச்சாலை, காடுவெட்டி, தா.பழூா் வட்டாரத்தில் தா.பழூா், சுத்தமல்லி, ஸ்ரீபுரந்தான், இடங்கன்னி, ஆண்டிமடம் வட்டாரத்தில் ஆண்டிமடம் என 9 தனியாா் உரக்கடைகளுக்கும், 4 தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கும் உரங்கள் விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மானிய விலையில் வழங்கப்படும் யூரியாவை விவசாயிகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும். இதற்காக ஆதாா் எண் பெற்று, சாகுபடி செய்யப்படும் நிலப்பரப்பு மற்றும் பயிா்களுக்கு ஏற்ப வழங்க வேண்டும்.

உரக்கடைகளிலுள்ள வேலையாள்கள், உரக்கடை நடத்தி வரும் குடும்ப உறுப்பினா், நிலமற்றவா்கள் மற்றும் தகுதியற்ற நபா்களுக்கு உரம் வழங்குவது தெரிய வந்தால் உரக்கட்டுப்பாட்டு ஆணையின் படி உரஉரிமம் ரத்து செய்யப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com