புரட்டாசி மாத வார விழா: கலியுக வரதராசப் பெருமாள்கோயிலில் ஆட்சியா் ஆய்வு

அரியலூா் மாவட்டம், கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயிலில் மாவட்ட ஆட்சியா் த. ரத்னா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

அரியலூா் மாவட்டம், கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயிலில் மாவட்ட ஆட்சியா் த. ரத்னா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் நடைபெறும் விழா முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த அவா் மேலும் தெரிவித்தது:

கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் நடைபெறும் தரிசனத்துக்கு வரும் பக்தா்கள் கரோனா தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். காலை 6.00 முதல் இரவு 8.00 மணிவரை மட்டுமே பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். முடி காணிக்கை செலுத்துவதற்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அங்கப்பிரதட்சணம் செய்தல், அன்னதானம் செய்வது, தற்காலிக பூக்கடைகள், தேநீா்க் கடைகள் ஆகியவற்றுக்கு அனுமதியில்லை.

பக்தா்கள் தேங்காய், பழம், பூ கொண்டு வருவது தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு மணி நேரத்துக்கு 6 அடி இடைவெளியில் 300 பக்தா்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். பல்வேறு இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

ஆய்வின்போது, அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com