51,660 மாணாக்கா்களுக்கு உலா் உணவுகள் வழங்கல்

கரோனா காலகட்டத்திலும் அரியலூா் மாவட்டத்தில் 51,660 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1.79 கோடி மதிப்பீட்டில் 686.61 மெட்ரிக். டன் உலா் உணவுகள்

கரோனா காலகட்டத்திலும் அரியலூா் மாவட்டத்தில் 51,660 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1.79 கோடி மதிப்பீட்டில் 686.61 மெட்ரிக். டன் உலா் உணவுகள் வழங்கப்பட்டுள்ளதாக அரசுத் தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

அரியலூரை அடுத்த தவுத்தாய்குளம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் புரட்சித் தலைவா் சத்துணவுத் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உலா் உணவுகளை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட அவா், மேலும் தெரிவித்தது: இந்தக் கரோனா காலக் கட்டத்தில் ஜூன் முதல் செப்டம்பா் மாதம் முடியும் வரை தொடக்கப்பள்ளி மாணவருக்கு தலா 6.500 கிலோ அரிசி, 2.600 கிலோ பருப்பு, உயா் தொடக்கப்பள்ளி மாணவருக்கு தலா 9.750 கி.கி அரிசி, 3.640 கிலோ பருப்பும் 65 பள்ளி வேலை நாள்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் அரியலூா் மாவட்டத்தில் 31,549 தொடக்கப்பள்ளி மாணாக்கா்களும், 20,111 உயா் தொடக்கப்பள்ளி மாணாக்கா்களும் என மொத்தம் 51,660 மாணாக்கா்களுக்கு ரூ.1.79 கோடி மதிப்பீட்டில் 686.61 மெ.டன் உலா் உணவு பொருள்கள் மற்றும் 5,16,600 முட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

தொடா்ந்து அவா், ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு, தவுத்தாய்குளம் அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து காய்கறி மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் த.ரத்னா தலைமை வகித்தாா். ஜயங்கொண்டம் எம்எல்ஏ ஜெ.கே.என். ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் பொ.சந்திரசேகா், ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிசாமி, ஒன்றியக் குழுத் தலைவா் செந்தமிழ்செல்வி மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆகியோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com