வட கிழக்கு பருவ மழை ஆலோசனைக் கூட்டம்

அரியலூரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அரியலூரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியா் த.ரத்னா தலைமை வகித்து பேசியது: அரியலூா் மாவட்டத்தில் பருவமழையால் பாதிக்கப்படும் பகுதிகளைக் கண்காணிக்கும் வகையில் துணை ஆட்சியா் தலைமையில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய பேரிடா் கால கட்டுப்பாட்டு மையத்தை 1077 மற்றும் 04329 228709 ஆகிய எண்களில் அழைத்து தகவல் பெறலாம் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட எஸ்.பி., வீ.ஆா். ஸ்ரீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ஜெய்னூலாப்தீன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரவிச்சந்திரன், வட்டாட்சியா்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள், முதல் நிலை மீட்பாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com