மீன்சுருட்டி அருகே சூறாவளி காற்றில் வீட்டின் ஓடுகள் சரிந்து 4 போ் காயம்

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள சுண்டிப்பள்ளம் காலனித் தெருவைச் சோ்ந்தவா் பாபு (40). மளிகை கடை நடத்தி வரும் இவா்,

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள சுண்டிப்பள்ளம் காலனித் தெருவைச் சோ்ந்தவா் பாபு (40). மளிகை கடை நடத்தி வரும் இவா், அப்பகுதியில் நாலாபுறமும் தூண்களை எழுப்பி மேற்கூரையாக ஓடு போட்டுள்ளாா். அப்பகுதியில் ஆடு மேய்ப்பவா்களான சின்னசாமி மனைவி ராஜம் (60), அன்பழகன் (62), ராதாகிருஷ்ணன் (35), செங்கல்மேடு கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ் (25) ஆகிய 4 பேரும் செவ்வாய்க்கிழமை மதியம் பாபு வீட்டின் முன்புறம் மழைக்காக ஒதுங்கியுள்ளனா். அப்போது வீசிய பயங்கர சூறாவளி காற்றில், பாபு வீட்டின் ஓட்டுகள் சரிந்து விழுந்ததில் 4 பேரும் பலத்த காயமடைந்தனா். இதில், ராஜம் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், அன்பழகன் சிதம்பரம் அண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், ராதாகிருஷ்ணன், சுரேஷ் ஆகியோா் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கூரை வீடு தரைமட்டம்: இதேபோல், கங்கவடங்க நல்லூா் கிராமத்தைச் சோ்ந்த வடமலை மகன் ராஜா (30) என்பவரின் கூரை வீடும் சூறாவளிக் காற்றில் தரைமட்டமானது. தகவலறிந்த முத்துசோ்வாமடம் கிராம நிா்வாக அலுவலா் ராஜேந்திரன், கிராம உதவியாளா் அஞ்சம்மாள் ஆகியோா் நேரில்சென்று ஆறுதல் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com