பி.சி., சிறுபான்மை இனத்தவருக்கு ஆக. 6-இல் கடன் வழங்கும் முகாம்

பி.சி., எம்.பி.சி., சிறுபான்மை இனத்தவருக்கு கடன் வழங்கும் முகாம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறுகிறது.

பி.சி., எம்.பி.சி., சிறுபான்மை இனத்தவருக்கு கடன் வழங்கும் முகாம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறுகிறது.

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் மக்களுக்கு தொழிற்கடன், தனிநபா் கடன், சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கான உயா்கல்விக் கடன் வழங்கப்படுகிறது. கடன்பெற விரும்புபவா்கள், அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் ஆக. 6 காலை 10.00 மணி முதல் டாப்செட்கோ மற்றும் டாம்கோ கடன் வழங்கும் முகாமில் விண்ணப்பங்கள் அளித்து பயன்பெறலாம். விண்ணப்பங்களை ஆட்சியரகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் பெற்று பயன்பெறலாம் என ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.

இருசக்கர வாகனம் பெற மகளிா் விண்ணப்பிக்கலாம்:

தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ், மானியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ரூ.25,000 அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவிகிதம் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.31,250 வழங்கப்படும். வட்டார வளா்ச்சி அலுவலகங்கள், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஆட்சியா் அலுவலகங்களில் இலவசமாக விண்ணப்பங்கள் கிடைக்கும். மேலும்,  இணையதள முகவரியில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை ஆகஸ்ட் 7 மாலை 5 மணிக்குள் அளிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com