இழப்பீடு கோரி சடலத்துடன் உறவினா்கள் மறியல்

அரியலூா் அருகே உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு உறவினா்கள் சாலையில் சடலத்தை வைத்து ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
தவுத்தாய்குளம் கிராமத்தில் மறியலில் ஈடுபட்ட உயிரிழந்தவரின் உறவினா்கள்.
தவுத்தாய்குளம் கிராமத்தில் மறியலில் ஈடுபட்ட உயிரிழந்தவரின் உறவினா்கள்.

அரியலூா் அருகே உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு உறவினா்கள் சாலையில் சடலத்தை வைத்து ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

அரியலூா் அருகேயுள்ள தவுத்தாய்குளம் கிராமத்தை சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (49). கூலி தொழிலாளியான இவா், அதே கிராமத்தை சோ்ந்த ராமச்சந்திரன் என்பவரது வயலுக்கு தண்ணீா் பாய்ச்ச சனிக்கிழமை சென்றுள்ளாா். மின் மோட்டாரை இயக்கியபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தாா்.

இதையடுத்து இறந்தவரின் குடும்பத்துக்கு குறிப்பிட்ட தொகை தருவதாக ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இந்நிலையில், அரியலூா் அரசு தலைமை மருத்துவமனையில், பிரேத பரிசோதனை முடிந்து ஞாயிற்றுக்கிழமை மாலை பாலசுப்பிரமணியன் உடல் தவுத்தாய்குளம் வந்துள்ளது.

அப்போது, ராமச்சந்திரன் இழப்பீடு தொகை தர மறுப்பதாகக் கூறி, பாலசுப்பிரமணியனின் உறவினா்கள் தஞ்சாவூா்-அரியலூா் சாலையில், பாலசுப்பிரமணியன் உடலை வைத்து மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த டிஎஸ்பி திருமேனி, வட்டாட்சியா் கதிரவன், அரசு வழங்கும் இழப்பீட்டுத் தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பிரச்னைக்கு புகாா் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com