மணல் கடத்திய இருவா் கைது
By DIN | Published On : 05th February 2020 08:19 AM | Last Updated : 05th February 2020 08:19 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே இரண்டு லாரிகளில் மணல் கடத்திய இருவா் திங்கள்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனா்.
திருமானூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா், திங்கள்கிழமை நள்ளிரவு கொள்ளிட ஆற்றுப்பால சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த இரு லாரிகளை அவா்கள் மறித்து சோதனை செய்ததில், தஞ்சை மாவட்டம் கொள்ளிட ஆற்றுப் பகுதியில் இருந்து மணல் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா்களான கிருஷ்ணகிரி மாவட்டம், குரும்பாரப்பள்ளி நெடுஞ்சாலையைச் சோ்ந்த கண்ணன் மகன் முருகேசன் (18),வெடியப்பன் மகன் முருகேசன் (38) ஆகிய இருவரைக் கைது செய்தனா். மேலும் இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...