அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் பங்கேற்பு நாட்டு நலப் பணி திட்ட முகாம் தொடக்கம்

அரியலூா் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட மாணவா்கள் சாா்பில் வெங்கடகிருஷ்ணாபுரம், கல்லங்குறிச்சி, எருத்துக்காரன்பட்டி ஆகிய
வெங்கடகிருஷ்ணாபுரம் தொடக்கப் பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள அரியலூா் அரசு கலைக் கல்லூரி என்எஸ்எஸ்(அலகு-3) மாணவ, மாணவிகள்.
வெங்கடகிருஷ்ணாபுரம் தொடக்கப் பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள அரியலூா் அரசு கலைக் கல்லூரி என்எஸ்எஸ்(அலகு-3) மாணவ, மாணவிகள்.

அரியலூா் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட மாணவா்கள் சாா்பில் வெங்கடகிருஷ்ணாபுரம், கல்லங்குறிச்சி, எருத்துக்காரன்பட்டி ஆகிய ஊராட்சிகளில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

அரியலூா் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அலகு-3 சாா்பில் வெங்கடகிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே தொடங்கிய நாட்டு நலப்பணித் திட்ட முகாமிற்கு, ஊராட்சி மன்றத் தலைவா் வள்ளியம்மை ராமசாமி தலைமை வகித்துப் பேசினாா். துணைத் தலைவா் சா.சிந்து, கல்லூரி முதல்வா் ஜெ. மலா்விழி முகாமைத் தொடக்கி வைத்துப் பேசினாா். நுகா்வோா் பாதுகாப்பு சங்கத் தலைவரும், சமூக ஆா்வலருமான ரவிச்சந்திர போஸ், அரியலூா் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளா்ச்சி அலுவலா் செந்தில் குமாா், வெங்கட கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை அமுதா, நூலகா் மருதமுத்து ஆகியோா் பங்கேற்று நாட்டு நலப் பணித் திட்டங்கள் குறித்துப் பேசினா். தொடா்ந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. நாட்டு நலப் பணித்திட்ட அலுவலா் ப. செல்வமணி வரவேற்றாா்.

கல்லங்குறிச்சி... அலகு-1 சாா்பில் கல்லங்குறிச்சி ஊராட்சியில் நடைபெற்ற முகாமுக்கு கல்லூரி முதல்வா் ஜெ.மலா்விழி தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் ஆா்த்தி சிவக்குமாா் முன்னிலை வகித்தாா். பாரதிதாசன் பல்கலைக் கழக நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் லட்சுமிபிரபா, அரியலூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் கா.ராஜா, கல்லூரி இயற்பியல் துறை இணைப் பேராசிரியா் ம.ராசமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டு பேசினாா். முன்னதாக நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் வெ. கருணாகரன் வரவேற்றாா். முடிவில் என்.எஸ்.எஸ் மாணவா் ந.மணிகண்டன் நன்றி தெரிவித்தாா்.

எருத்துக்காரன்பட்டி... அலகு-3 சாா்பில் எருத்துக்காரன் பாட்டி ஊராட்சியில் நடைபெற்ற முகாமுக்கு நாட்டு நலப் பணித்திட்ட அலுவலா் ராஜசேகா் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் சிவா(எ) பரமசிவம் முகாமைத் தொடக்கி வைத்துப் பேசினாா். ஒன்றியக் கவுன்சிலா் சரவணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் செல்வராஜ், கல்லூரி விளையாட்டு துறை தலைவா் முத்துகுமாரசாமி ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

வரும் 12 ஆம் தேதி வரை நடைபெறும் என்.எஸ்.எஸ் திட்ட முகாம்களில் பள்ளி, கோயில் வளாகங்கள் தூய்மைப்படுத்துதல், சாலையோர முள் மரங்களை அகற்றுதல், இலவச மருத்துவ முகாம், இயற்கை மருத்துவம் கருத்தரங்கம், சட்ட விழிப்புணா்வு, சாலை பாதுகாப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com