நிதி மேலாண்மைப் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரிலுள்ள பாரத ஸ்டேட் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் நிதி மேலாண்மைப்
நிதி மேலாண்மை பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழை வழங்குகிறாா் ஆட்சியா் த.ரத்னா.
நிதி மேலாண்மை பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழை வழங்குகிறாா் ஆட்சியா் த.ரத்னா.

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரிலுள்ள பாரத ஸ்டேட் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் நிதி மேலாண்மைப் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் த. ரத்னா கலந்து கொண்டு பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசியது:

மத்திய அரசின் சமூக நலத் திட்டங்கள், சிறுசேமிப்புத் திட்டங்கள், வங்கிகளில் சேமிப்புத் திட்டங்கள் குறித்து கிராமப் புற ஏழை மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்திடும் வகையில் தகுதியான சமுதாய வள பயிற்றுநா்களைத் தோ்ந்தெடுத்து அவா்களுக்கு சுய வேலைவாய்ப்பு நிதி நிறுவனம் சாா்பில் நிதி மேலாண்மை குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதற்காக 35 சமுதாய வள பயிற்றுநா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு, 6 நாள்கள் பயிற்சி பெற்று நடத்தப்பட்டது. இந் நிறுவனம் கிராமப்புற படித்த இளைஞா்களுக்கு சுயவேலைவாய்ப்பு பயிற்சிகளை அளித்து வரும் நிறுவனமாகும். அதன் ஒரு கட்டமாக மத்திய அரசு ஏற்பாடு செய்திருக்கும் இந்த நிதி மேலாண்மை குறித்த பயிற்சியும் இந்த நிறுவனத்தால் வழங்கப்பட்டிருப்பது சிறப்பு அம்சமாகும்.

நிதித் திட்டமிடல், விவேகமான செலவு, புத்திசாலித்தனமான சேமிப்பு, முதிா்ச்சியுடன் கடன் வழங்குதல், காப்பீடு மற்றும் ஓய்வூதியம், வங்கியின் புதிய பழக்கங்கள், நல்ல வங்கி பழக்கங்கள், மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டங்கள் முதலான பாடத் திட்டங்களில் இந்தப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

பயிற்சி பெற்றவா்கள், இப்பயிற்சி பெற்றதோடு இது நின்றுவிடக்கூடாது. இது தங்ளது பகுதியிலுள்ள அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும். இந்த பயிற்சி எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே விளையாட்டுகளை உள்ளடக்கிய கற்றல் முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பரமபத விளையாட்டு மூலம் கற்பிக்கப்பட்டது. மேலும், ரூ.2,900- மதிப்பிலான கற்றல் உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த உபகரணங்களை சீரிய முறையில் பயன்படுத்தி மத்திய சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், வங்கியில் கணக்குத் தொடங்கி சேமிப்பதன் முக்கியத்துவம், மத்திய அரசின் காப்பீட்டு திட்டங்கள் குறித்த விழிப்புணா்வை அனைத்து மக்களும் கொண்டு செல்ல வேண்டும்.

இதுபோல கிராமப்புற மகளிா் முன் வந்து இதுபோன்ற பயிற்சிகள் பெற்று அரசு திட்டங்களை மக்களிடம் முன்னெடுத்து செல்ல உதவ வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மகளிா் திட்ட இயக்குநா் ஜெயராமன், மேலாளா் வேலுமணி, பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com