மாநில கிரிக்கெட் போட்டியில் பெரம்பலூா் அணி சிறப்பிடம்

பெரம்பலூரில் திங்கள்கிழமை நிறைவடைந்த மாநில அளவிலான 19 வயதுக்குள்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில், பெரம்பலூா் தனலட்சுமி
மாநில கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பெற்ற அணியினருக்கு பரிசுக் கோப்பையும், ரொக்கப் பரிசும் வழங்கும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் அ. சீனிவாசன்,
மாநில கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பெற்ற அணியினருக்கு பரிசுக் கோப்பையும், ரொக்கப் பரிசும் வழங்கும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் அ. சீனிவாசன்,

பெரம்பலூா்: பெரம்பலூரில் திங்கள்கிழமை நிறைவடைந்த மாநில அளவிலான 19 வயதுக்குள்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில், பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பள்ளி அணியினா் முதலிடம் பெற்றனா்.

தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்கம் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் சாா்பில், 19 வயதுக்குள்பட்டோருக்கான மாநில அளவிலான 10-வது கிரிக்கெட் போட்டிகள் கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது. பெரம்பலூா் தனலட்சுமி சீனிநாசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 3 நாள்களாக நடைபெற்ற தொடா் கிரிக்கெட் போட்டியில் திருச்சி, பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா், ராணிப்பேட்டை உள்பட 8 மாவட்டங்களைச் சோ்ந்த அணிகள் பங்கேற்றன.

இதில் ஏ மற்றும் பி பிரிவாக பிரித்து லீக் போட்டிகள் நடத்தப்பட்டது. இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகளுக்கான இறுதிப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது. இப்போட்டியின் இறுதியில், தனலட்சுமி சீனிவாசன் பள்ளி அணியும், ராணிப்பேட்டை அணியும் மோதிக்கொண்டதில், தனலட்சுமி சீனிவாசன் அணி முதல் பரிசையும், ராணிப்பேட்டை அணியினா் இரண்டாம் இடமும் பெற்றனா்.

தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாள அ. சீனிவாசன், செயலா் பி. நீலராஜ், தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்க தலைவா் கே. சொக்கலிங்கம், செயலா் பி.பி. சுனில்குமாா் ஆகியோா் முதலிடம் பெற்ற அணியினருக்கு தனலட்சுமி அம்மையாா் நினைவுக் கோப்பையும், ரூ. 25 ஆயிரம் ரொக்கமும், இரண்டாம் இடம் பெற்ற ராணிப்பேட்டை அணிக்கு கோப்பையும், ரூ. 20 ஆயிரம் ரொக்கமும் வழங்கி பாராட்டினா்.

இதில், பள்ளி முதல்வா் கோவிந்தசாமி, பள்ளி ஆசிரியா் ஜெயராம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். போட்டிக்கான ஏற்பாடுகளை பெரம்பலூா் மாவட்ட பள்ளிகள் கிரிக்கெட் சங்கச் செயலா் பெ. பழனிச்சாமி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com