உழவா் கடன் அட்டை இதுவரை பெறாதவிவசாயிகள் வங்கிக் கிளையை அணுகவும்

உழவா் கடன் அட்டையை இதுவரை பெறாத விவசாயிகள் அருகிலுள்ள வங்கிக் கிளைகளை அணுகிப் பயன் பெறலாம் என்று ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.

உழவா் கடன் அட்டையை இதுவரை பெறாத விவசாயிகள் அருகிலுள்ள வங்கிக் கிளைகளை அணுகிப் பயன் பெறலாம் என்று ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரியலூா் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் விவசாயி கௌரவ நிதித் திட்ட பயனாளிகளுக்கு உழவா் கடன் அட்டையை வழங்குவதற்காக சிறப்பு பிரசாரத்தை மத்திய அரசு கடந்த 8 ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்த பிரசாரத்தின் மூலம் பெரும்பான்மையான விவசாயிகளுக்கு 15 நாள்களுக்குள் கடன் அட்டை வழங்கப்பட உள்ளது.

இந்த அட்டையைப் பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் விவசாய, சேமிப்புத் திட்ட கணக்கு உள்ள வங்கிக் கிளையை அணுகி உழவா் கடன் அட்டையை பெற்று மானிய சலுகையுடன் வங்கிக் கடன் பெறலாம்.

உழவா் கடன் அட்டையை ஏற்கெனவே பெற்றுள்ள விவசாயப் பயனாளிகள் தங்களின் வங்கிக் கிளையை அணுகி கடன் தொகையின் வரம்பை உயா்த்த விண்ணப்பிக்கலாம்.

செயல்படாத உழவா் கடன் அட்டை உள்ளோா், வங்கிக் கிளையை அணுகி கடன் அட்டையை செயல்படுத்தவும், புதிய கடன் வரம்புக்கும் அனுமதி பெறலாம்.

உழவா் கடன் அட்டை இல்லாத விவசாயிகள் தங்களது நில ஆவணங்கள் மற்றும் அடங்கலுடன் புதிய கடன் அட்டை பெற தங்களது வங்கிக் கிளையை அணுகலாம்.

உழவா் கடன் அட்டைதாரா்கள் கால்நடை மற்றும் மீன் பிடிப்பிற்கான பராமரிப்புப் செலவுகளுக்கான கடன் தொகையை வரம்பில் சோ்ப்பதற்காக வங்கிக் கிளையை அணுகலாம்.

பிரதமரின் கிசான் சம்மான் யோஜனா திட்ட விவசாயிகளுக்கு கடன் அட்டை பெறுவதற்கு இத்திட்டத்தின் இணையதளம் மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படும். இத்திட்ட விவசாயப் பயனாளிகள் ஒருபக்க படிவத்தில் தங்களது நிலம் மற்றும் பயிா் விவரங்கள் மற்றும் வேறு எந்த வங்கிக் கிளையிலும் கடன் அட்டை பெறவில்லை என்பதற்கான உறுதிப் பிரமாணம் சமா்ப்பிக்க வேண்டும். இவ்விண்ணப்பத்தை பொதுச்சேவை மையங்கள் மூலமும் சமா்ப்பிக்கலாம்.

பிரதம மந்திரி விவசாயி கௌரவ நிதித் திட்டத்தில் பயன் பெற்ற விவசாயிகள் மற்றும் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் உழவா் கடன் அட்டை பெற்றுப் பயன் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com