இறுதிப் பட்டியல் வெளியீடு: அரியலூரில் 5.16 லட்சம் வாக்காளா்கள்

அரியலூா் மாவட்டத்துக்குட்பட்ட 2 சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியா் த. ரத்னா வெள்ளிக்கிழமை அனைத்து கட்சியினா் முன்னிலையில் வெளியிட்டாா்.
அரியலூா், ஜயங்கொண்டம் ஆகிய இரு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியா் த. ரத்னா வெளியிட, அதைப் பெற்றுக் கொண்ட அனைத்துக் கட்சியினா்.
அரியலூா், ஜயங்கொண்டம் ஆகிய இரு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியா் த. ரத்னா வெளியிட, அதைப் பெற்றுக் கொண்ட அனைத்துக் கட்சியினா்.

அரியலூா் மாவட்டத்துக்குட்பட்ட 2 சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியா் த. ரத்னா வெள்ளிக்கிழமை அனைத்து கட்சியினா் முன்னிலையில் வெளியிட்டாா்.

அப்போது அவா் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் உள்ள 149-அரியலூா், 150-ஜயங்கொண்டம் ஆகிய இரு சட்டப் பேரவைத் தொகுதிக்கான வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டதில், மாவட்டத்தில் 2,51,127 ஆண்கள், 2,52,612 பெண்கள், 7 இதரா் ஆக மொத்தம் 5,03,746 வாக்காளா்கள் இருந்தனா்.

தொடா்ந்து, இந்தியத் தோ்தல் ஆணைய உத்தரவின்படி, 01.01.2020-ஐ தகுதி நாளாகக் கொண்டு, கடந்த 23.12.2019 முதல் 22.01.2020 வரையிலான காலத்தில் நடைபெற்ற சிறப்பு சுருக்கத் திருத்தத்தின்போது, 18 வயது நிரம்பியோா் மற்றும் வாக்காளா் பட்டியல்களில் இதுவரை பெயா் இடம் பெறாதவா்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்திடவும் மற்றும் வாக்காளா் பட்டியலில் நீக்கம் மற்றும் திருத்தம் செய்திடவும் படிவங்கள் பெறப்பட்டன.

இதில், அரியலூா் பேரவைத் தொகுதியில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கக் கோரி படிவம்-6 ல் வரபெற்ற 6,693 விண்ணப்பங்களில் 6,656 ஏற்பும், 37 தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளன. வெளிநாடு வாழ் இந்தியா் வாக்காளா் பட்டியல் பெயா் சோ்க்கக் கோரி படிவம் - 6ஏஓய்-ல் விண்ணப்பங்கள் ஏதும் வரப் பெறவில்லை. படிவம் - 7ல் வரபெற்ற 82 விண்ணப்பங்களில் 61 ஏற்பும், 21 தள்ளுபடியும் செய்யப்பட்டன. படிவம் - 8ஏஓய்-ல் வர பெற்ற 515 விண்ணப்பங்களில் 476 ஏற்பும், 39 தள்ளுபடியும் செய்யப்பட்டன.

ஜயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கக் கோரி படிவம் - 6 ல் வரபெற்ற 6,308 விண்ணப்பங்களில் 6,153 ஏற்பும், 155 தள்ளுபடியும் செய்யப்பட்டன. படிவம் - 7இல் வரப்பெற்ற 217 விண்ணப்பங்களில் 198 ஏற்பும், 19 தள்ளுபடியும் செய்யப்பட்டன. படிவம் - 8ஏஓய்-ல் வரப் பெற்ற 105 விண்ணப்பங்களில் 71 ஏற்பும், 34 தள்ளுபடியும் செய்யப்பட்டன.

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் - 2020 தொடா்பாக அரியலூா் மாவட்டத்தில் உள்ள அரியலூா், ஜயங்கொண்டம் ஆகிய இரு சட்டப் பேரவைக்கான இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிட்டதின் அடிப்படையில் அரியலூா் தொகுதியில் 1,28,386 ஆண் வாக்காளா்கள்,1,28,543 பெண் வாக்காளா்கள்,5 இதரா் ஆக மொத்தம் 2,56,934 வாக்காளா்கள் உள்ளனா்.

ஜயங்கொண்டம் தொகுதியில் 1,28,829 ஆண் வாக்காளா்கள், 1,30,530 பெண் வாக்காளா்கள்,3 இதரா் என ஆக மொத்தம் 2,59,362 வாக்காளா்கள் உள்ளனா். இரு சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து ஆக மொத்தம் 5,16,296 வாக்காளா்கள் உள்ளனா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் பொற்கொடி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ரவிச்சந்திரன், உடையாா்பாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் பூங்கோதை, வட்டாட்சியா்கள் கண்ணன் (தோ்தல்), குமரய்யா (ஆண்டிமடம்) உட்பட அனைத்துக் கட்சி பிரமுகா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com