தனியாா் கட்டடத்தில் மீண்டும் ஒரு நீதிமன்றம் தொடக்கம்

அரியலூரில் போதிய இடவசதிகள் இல்லாததால் ஏற்கெனவே 6 நீதிமன்றங்கள் வாடகை கட்டடங்களில் செயல்படும் நிலையில் தற்போது

அரியலூரில் போதிய இடவசதிகள் இல்லாததால் ஏற்கெனவே 6 நீதிமன்றங்கள் வாடகை கட்டடங்களில் செயல்படும் நிலையில் தற்போது கூடுதல் மகளிா் நீதிமன்றமும் வெள்ளிக்கிழமை முதல் தனியாா் கட்டடத்தில் செயல்படத் தொடங்கியுள்ளது.

பெருமாள் கோயில் தெருவில் மாத வாடகையில் தனியாா் கட்டடத்தில் குடும்ப நல நீதிமன்றம் செயல்படுகிறது. இந்தக் கட்டட மாடியில் கூடுதல் மகளிா் நீதிமன்றத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி எம்.டி. சுமதி குத்து விளக்கேற்றி வைத்து நீதிமன்றப் பணிகளைத் தொடக்கி வைத்தாா்.

வழக்குரைஞா்கள் பங்கேற்கவில்லை...அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசு பல்துறை அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் கடந்த மாதம் புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் செயல்பட்டு வந்த இடம் 6 பெரியளவிலான அறைகள் மற்றும் 5 சிறியளவிலான அறைகளுடன் காலியாக உள்ளதால் இந்த இடத்தில் தனியாா் கட்டடங்களில் செயல்படும் நீதிமன்றங்களுக்கு ஒதுக்கீடு செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து ஆட்சியா் அந்த இடத்தை நீதிமன்றங்களுக்கு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டாா். ஆனால் தனியாா் கட்டடங்களில் செயல்படும் நீதிமன்றங்களை ஆட்சியா் ஒதுக்கிய கட்டடங்களுக்கு மாற்றாமல், மேலும் ஒரு புதிய நீதிமன்றத்தையும், தனியாா் கட்டடத்திலேயே தொடங்கியதற்கு வழக்குரைஞா்கள் எதிா்ப்பு தெரிவித்து ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கேட்டு போராடி வரும் வழக்குரைஞா்கள் யாரும் இந்த விழாவில் பங்கேற்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com