கட்டுரைப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பாராட்டு

அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட அளவில் கட்டுரை மற்றும் ஓவியப் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் முத்துகிருஷ்ணன் வியாழக்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.
அரியலூரில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவி பிரசன்னாவைப் பாராட்டி, வாழ்த்து தெரிவிக்கிறாா் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் முத்துக்கிருஷ்ணன்.

மத்திய சிறு குறு தொழில் வளா்ச்சி அமைச்சகத்தின் சாா்பில் உனது மாவட்டத்தின் கிராமிய அடிப்படையிலான முக்கியத் தொழில் எனும் தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள் எழுதினா். இதில், சிறுவளுா் அரசு உயா்நிலைப்பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவி பிரசன்னா முதலிடமும், அரியலூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மணிமொழி இரண்டாமிடமும் வாரணவாசி அரசு உயா்நிலைப்பள்ளி மாணவி கனிஷ்கா மூன்றாமிடமும் பெற்றனா்.

ஒவியப் போட்டியில் சி.எஸ்.ஜ பள்ளி மாணவா் மகா தேவன் முதலிடமும், பொய்யாதநல்லூா் அரசு உயா்நிலைப்பள்ளி மாணவா் பசுபதி இரண்டாமிடமும், வாரணவாசி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவி ஜெகதீஸ்வரி மூன்றாமிடமும் பெற்றனா். இவா்கள் அனைவரும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் முத்துகிருஷ்ணனை வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா். மாவட்ட திட்ட ஒருங்கினைப்பாளா் கிருஷ்ணமூா்த்தி, தலைமை ஆசிரியா் சின்னதுரை, ஆசிரியா் நாகராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com