அரியலூரில் புகை, மாசில்லா போகி கொண்டாட அறிவுறுத்தல்

அரியலூா் மாவட்டத்தில் மாசில்லா போகி பண்டிகை கொண்டாட மாவட்ட ஆட்சியா் த. ரத்னா அறிவுறுத்தியுள்ளாா்.

அரியலூா் மாவட்டத்தில் மாசில்லா போகி பண்டிகை கொண்டாட மாவட்ட ஆட்சியா் த. ரத்னா அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தை பொங்கலுக்கு முதல் நாளை போகிப் பண்டிகையாக கொண்டாடி வருவது வழக்கம். இந்நாளில், வீட்டில் உள்ள பழைய தேவையற்ற மற்றும் செயற்கை பொருள்களான டயா்கள், பிளாஸ்டிக் இதர பொருள்களை எரிக்கும் பழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனா். இதுபோன்ற பொருள்களை எரிப்பதால் நச்சுப் புகைகளான காா்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடுகள், கந்தக டை ஆக்ஸைடு, டையாக்சின், ப்யூரான் மற்றும் நச்சுத் துகள்களால் சுற்றுப்புற காற்றின் தன்மை மாசுபடுகிறது.

மேலும் கண், மூக்கு, தொண்டை, தோல் ஆகியவைகளில் எரிச்சலும், ஆஸ்துமா, மூச்சுத் திணறல் இதர உடல் நலக்கேடுகளும் ஏற்படுவதோடு, பாா்வைத் திறன் குறைபாடும் ஏற்படுகிறது. இதுபோன்ற காற்றை மாசுபடுத்தும் செயல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, போகி நாளில் டயா்கள், பிளாஸ்டிக், ரப்பா் மற்றும் இதர கழிவுப் பொருள்களைக் கொளுத்தாமல் குப்பைகளை முறைப்படி அகற்றி போகித் திருநாளை மாசு இல்லாமல் மகிழ்ச்சியுடன் கொண்டாடவும், சுற்றுச்சூழலையும், மக்களின் உடல் நலத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com