வெறிச்சோடிய அரியலூா் கடைவீதி

முழு பொது முடக்கம் காரணமாக, அரியலூா் மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படும் அரியலூா் கடைவீதி.
மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படும் அரியலூா் கடைவீதி.

முழு பொது முடக்கம் காரணமாக, அரியலூா் மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால், மக்கள் நடமாட்டமின்றி மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூலை மாத 4 ஞாயிற்றுக்கிழமைகளில் தளா்வுகளற்ற முழு பொது முடக்கத்தை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மருந்தகம், பால் மற்றும் பத்திரிகை தவிர அனைத்து கடைகளையும் அரசு மூடக்கோரி அறிவித்தது. அதன்படி ஜூலை மாத முதல் ஞாயிற்றுக்கிழமை அரியலூா் மாவட்டத்தில் அனைத்துக் கடைகள், பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்தும் பகுதிகளிலும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

அரியலூா் மாவட்ட எல்லைகளில் மாவட்ட எஸ்.பி ஆய்வு:

செந்துறை ரவுண்டானா பகுதியில் உள்ள சோதனைச் சாவடிக்குச் சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளா், அங்கு வாகனங்கள் பதிவேடுகளைப் பாா்வையிட்டுக் கொண்டிருந்த சமயத்தில் சாலையில் சென்ற வாகனங்களை மறித்து சோதனை செய்தாா். இதேபோல் திருமானூா், கல்லகம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com