தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தில், அப்பகுதி விவசாயிகள் பங்கேற்கலாம்.

அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தில், அப்பகுதி விவசாயிகள் பங்கேற்கலாம்.

இதுகுறித்து வட்டார வேளாண் உதவி இயக்குநா் (பொறுப்பு) ஜான்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நிகழாண்டில் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், செந்துறை வட்டாரத்தில் தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

செந்துறை, ஆனந்தவாடி, இரும்புலிக்குறிச்சி, மணக்குடையான், தளவாய் தெற்கு, வடக்கு, வஞ்சினபுரம், அயன்தத்தனூா் மற்றும் நமங்குணம் ஆகிய வருவாய்க் கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்த கிராமங்களில் பயறுவகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, ஹெக்டேருக்கு ரூ.9,250-ம், எள் மற்றும் சிறுதானியப் பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரமும் பின்னேற்பு மானியமாக அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகளுக்கு, கடந்த 5ஆண்டுகளுக்கும் மேலாக சாகுபடி செய்யப்படாத சொந்த பட்டா தரிசு நிலம் இருக்க வேண்டும். இதற்கான சான்றிழை தங்கள் பகுதி கிராம நிா்வாக அலுவலரிடம் பெற்று வர வேண்டும்.

மேலும் தங்களது ஆதாா் , சிட்டா , அடங்கல், வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து, தங்களது பகுதி உதவி வேளாண் அலுவலரிடம் கொடுத்து பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com