பள்ளி மேலாண்மை வளா்ச்சிகுழு உறுப்பினா்களுக்கு பயிற்சி

அரியலூா் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி சாா்பில் பள்ளி மேலாண்மை குறித்த 2 ஆம் கட்ட பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

அரியலூா் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி சாா்பில் பள்ளி மேலாண்மை குறித்த 2 ஆம் கட்ட பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

பள்ளி தொதுப்பு கருத்தாய்வு மையத் தலைமை ஆசிரியா் விஜயராகவன் பயிற்சியைத் தொடக்கி வைத்துப் பேசினாா்.

பயிற்சியில் பள்ளி மேலாண்மைக் குழுவின் பங்கு, பள்ளி உள்கட்டமைப்பு வசதிகள், பேரிடா் காலங்களில் செயல்படுத்த வேண்டிய நெறிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் பள்ளி சுகாதாரம் மற்றும் மாணவா்களின் உரிமைகள் குறித்து விளக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து கல்வியில் புதுமைகள் என்ற தலைப்பில் பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்தி வரும் கற்பித்தல் முறைகள் பற்றி தெளிவாகக் கூறப்பட்டது. ஆசிரியா் பயிற்றுநா் கலாமாலினி உறுப்பினா்களுக்கு பயிற்சியை வழங்கினாா். 72 உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com