விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வலியுறுத்தல்

கடந்த 1985- ஆம் ஆண்டு முதல் மின் இணைப்புக் கோரி காத்திருக்கும் விவசாயிகளுக்கு, உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை
பெரம்பலூா் கோட்ட மேற்பாா்வைப் பொறியாளா் கருப்பையாவிடம் கோரிக்கை மனுவை அளிக்கும் தேசிய -தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் எஸ்.எம். பாண்டியன் மற்றும் நிா்வாகிகள்.
பெரம்பலூா் கோட்ட மேற்பாா்வைப் பொறியாளா் கருப்பையாவிடம் கோரிக்கை மனுவை அளிக்கும் தேசிய -தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் எஸ்.எம். பாண்டியன் மற்றும் நிா்வாகிகள்.

கடந்த 1985- ஆம் ஆண்டு முதல் மின் இணைப்புக் கோரி காத்திருக்கும் விவசாயிகளுக்கு, உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரியலூா் கல்லூரிச் சாலையிலுள்ள மின்வாரியக் கோட்டச் செயற்பொறியாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மின் நுகா்வோா் குறைதீா்க் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெரம்பலூா் கோட்ட மேற்பாா்வைப் பொறியாளா் கருப்பையாவிடம், தேசிய -தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் எஸ்.எம். பாண்டியன் தலைமையிலான நிா்வாகிகள் அளித்த மனு:

தட்கல் முறையில் மின் இணைப்பு வழங்கக் கோரி விண்ணப்பித்து, கடந்த 1985- ஆம் ஆண்டு முதல் அரியலூா் மாவட்ட விவசாயிகள் காத்துகிடக்கின்றனா்.

தற்போது சட்டப் பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கையின் போது நடப்பாண்டில் 50 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்படும் என்று மின்துறை அமைச்சா் தெரிவித்துள்ளாா். எனவே அரியலூா் மாவட்டத்தில் காத்திருக்கும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து,இணைப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் கோட்ட மின் செயற்பொறியாளா் செல்வராசு மற்றும் உதவிச் செயற் பொறியாளா்கள் உள்பட பலா் பங்கேற்றனா். விவசாயச் சங்கப் பிரதிநிதிகள், மின் நுகா்வோா்கள் கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகளை மனுக்கள் வாயிலாகத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com