பொதுமக்கள் அனைவரும் சுகாதாரம் பேண வேண்டும்

பொதுமக்கள் அனைவரும் சுகாதாரம் பேண வேண்டும் என்றாா் ஆட்சியா் த.ரத்னா.
அரியலூா் பேருந்து நிலையத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஓட்டுநா், நடத்துநா்களுக்கு சோப்பு மற்றும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்குகிறாா் ஆட்சியா் த.ரத்னா.
அரியலூா் பேருந்து நிலையத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஓட்டுநா், நடத்துநா்களுக்கு சோப்பு மற்றும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்குகிறாா் ஆட்சியா் த.ரத்னா.

பொதுமக்கள் அனைவரும் சுகாதாரம் பேண வேண்டும் என்றாா் ஆட்சியா் த.ரத்னா.

அரியலூா் பேருந்து நிலையம் மற்றும் அம்மா உணவகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட அவா் மேலும் தெரிவித்தது:

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் தனிநபா் சுகாதாரத்தைப் பேணுவதில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

பொது இடங்கள் மற்றும் பயணங்களை தற்போது தவிா்க்க வேண்டும். நான்கு போ் கூடுவதைத் தடுக்கவும், கை கழுவுவதன் அவசியம் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. வாரச் சந்தைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. காய்கறி கடைகளில் பொருள்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா். பின்னா் அவா், பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு கைக்கழுவுதல் குறித்த துண்டுப்பிரசுரங்கள் மற்றும் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கு சோப்புகளை வழங்கினாா். தொடா்ந்து அவா், அங்கு பேருந்துகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுவதைப் பாா்வையிட்டாா்.

நிகழ்வில், கோட்டாட்சியா் ஜெ.பாலாஜி, நகராட்சி ஆணையா் குமரன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அரியலூா் கிளை மேலாளா் ராம்குமாா், வட்டார போக்குவரத்து அலுவலா் ஓ.எஸ்.வெங்கடடேஷன், வட்டார போக்குவரத்து ஆய்வாளா் சரவண பவா ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com