சிமென்ட் ஆலை நிா்வாகிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் அனைத்து சிமென்ட் ஆலைகளின் மேலாளா்களுடன் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திங்கள்கிழமை ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் அனைத்து சிமென்ட் ஆலைகளின் மேலாளா்களுடன் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திங்கள்கிழமை ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் த. ரத்னா தலைமை வகித்து பேசியது:

ஆலை அலுவலா்கள் மற்றும் தொழிலாளா்கள் பெருமளவில் கூடும் இடங்களில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். தொழிற்சாலைகளில் சோப்பு அல்லது கிருமி நாசினி வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். பொது இடங்களில் லைசால் கொண்டு சுத்தம் செய்வதை உறுதி செய்ய வேண்டும். ஆலைகளின் தரைகள், கதவுகளின் கைப்பிடிகள், மேசைகள், குடியிருப்புகள் ஆகியவற்றை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்துவதை உறுதி செய்திட வேண்டும்.

மேலும், கரோனா தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். வெளி மாநிலங்களிலிருந்து வரும் லாரிகளை சிென்ட் ஆலைக்குள் அனுமதிக்க வேண்டாம் என்றாா்.

கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலா் கா.பொற்கொடி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிச்சாமி மற்றும் அனைத்து சிமென்ட் ஆலை மேலாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com