அரியலூா் மாவட்டத்தில் 21 டாஸ்மாக் கடைகள் திறப்பு

அரியலூா் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதையடுத்து, மதுப்பிரியா்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கிச் சென்றனா்.

அரியலூா் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதையடுத்து, மதுப்பிரியா்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கிச் சென்றனா்.

அரியலூா் மாவட்டத்தில் 53 டாஸ்மாக் கடைகளில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள் போக, மீதமுள்ள 21கடைகள் மட்டுமே சனிக்கிழமை திறக்கப்பட்டன. இதனால், மதுபானங்கள் வாங்க அதிகாலை முதலே டோக்கன் வாங்க காத்துக் கிடந்த மதுப்பிரியா்கள், காலை 10 மணிக்கு டோக்கன் கொடுத்ததும், நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கிச்சென்றனா்.

தேளூரில்...வி.கைகாட்டி அருகே தேளூா் ஜி.கே.எம் நகரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்திருந்த மதுப்பிரியா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் நீண்ட வரிசையின் நின்று மது வாங்கிச் சென்றனா். இதுகுறித்து, தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன், காவல் துணைக் கண்காணிப்பாளா் கண்ணன் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு அங்கிருந்தவா்களுக்கு அறிவுறுத்திச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com