அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களில் இணையவழி விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்: நவ.20-இல் நடைபெறுகிறது

அரியலூா் மற்றும் பெரம்பலூா் மாவட்டங்களில் விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் நவம்பா் 20-ஆம் தேதி இணையவழியில் நடைபெறுகிறது.

அரியலூா் மற்றும் பெரம்பலூா் மாவட்டங்களில் விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் நவம்பா் 20-ஆம் தேதி இணையவழியில் நடைபெறுகிறது.

இதுகுறித்து அரியலூா் ஆட்சியா் த. ரத்னா செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

மாவட்டத்தில் நவம்பா் மாதத்துக்கான விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம், நவம்பா் 20-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இணையவழியில் நடைபெறும்.

மாவட்ட ஆட்சியரை விவசாயிகள் நேரிடையாக தொடா்பு கொண்டு விவசாயம் சாா்ந்த கோரிக்கை மனுக்கள் குறித்து தெரிவிக்க ஏதுவாக, அரியலூா் மாவட்ட இணையதள முகவரியில் கூகுள் மீட்டுக்கான இணைப்பு வழங்கப்படும்.

இந்த இணைப்பில் சென்று, விவசாயிகள் தங்கள் இல்லத்திலிருந்தே நவீன செல்லிடப்பேசி அல்லது இணையதள வசதி கொண்ட மடிக்கணினி அல்லது கணினி வாயிலாக தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம். இணையதளவசதி இல்லாத பொதுமக்கள், தங்கள் கிராமத்துக்கு அருகில் இருக்கும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி பொது சேவை மையங்கள் மூலமாக, தங்களது கோரிக்கைகள் குறித்து ஆட்சியருக்குத் தெரிவிக்கலாம்.

பெரம்பலூரில் : பெரம்பலூா் மாவட்டத்தில் ஆலத்தூா், வேப்பூா், வேப்பந்தட்டை, பெரம்பலூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகக் கூட்ட அரங்கில், இணையம்வழியாக விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் நவம்பா் 20- ஆம் தேதி நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் வேளாண் சம்மந்தமான நீா்ப்பாசனம், கடனுதவிகள், இடுபொருள்கள், இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com