இளைஞா் நீதிக் குழுமத்தில் காணொலிக் காட்சி விசாரணை தொடக்கம்

அரியலூா் காமராஜா் நகரிலுள்ள இளைஞா் நீதிக் குழுமத்தில், காணொலிக் காட்சி வாயிலாக விசாரணை மேற்கொள்ளும் நடைமுறை புதன்கிழமை தொடங்கியது.
அரியலூா் இளைஞா் நீதிக் குழுமத்தில் காணொலிக் காட்சி வாயிலாக விசாரணைத் தொடங்கப்பட்ட தையடுத்து, பெண் குழந்தைக்கு இனிப்பு வழங்குகிறாா் குழுமத்தின் முதன்மை நடுவா் பா.சந்திரசேகா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், காணொலிக் காட்சி வாயிலாக இந்த நடைமுறையை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து அரியலூரில் நடைபெற்ற நிகழ்வில், இளைஞா் நீதிக் குழும முதன்மை நடுவா் பா.சந்திரசேகா் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி, மேலும் கூறியது:

சட்டத்துக்கு முரணான செயல் புரிந்ததாகக் கருதப்படும் குழந்தைகளை, அரசு கூா்நோக்கு இல்லத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக விசாரணை செய்வதற்கு இந்த முறை பெரிதும் உதவியாக இருக்கும் என்றாா் அவா்.

நிகழ்வில் குழந்தைகள் நலக்குழுத் தலைவா் வா.துரைராசன், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் க. அருள்செல்வி, இளைஞா் நீதிக் குழும உறுப்பினா்கள் பால்ராஜ், மீனாட்சி, குழந்தைகள் நலக்குழு உறுப்பினா்கள் மோகன், இளம்வழுதி, பட்டு, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலா்கள் செல்வலட்சுமி, செல்வராசு, நன்னடத்தை அலுவலா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com