விவசாயிகளுக்கு பண்ணைப் பள்ளிப் பயிற்சி
By DIN | Published On : 25th November 2020 07:18 AM | Last Updated : 25th November 2020 07:18 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகிலுள்ள நமங்குணம் கிராமத்தில் விவசாயிகளுக்கு பண்ணைப் பள்ளிப் பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.
அட்மா திட்டத்தின் கீழ், சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்ப நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து இப்பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண் உதவி இயக்குநா் ஜென்சி தலைமை வகித்தாா். வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் பழனிசாமி பயிற்சியில் பங்கேற்று பேசினாா்.
பயிற்சியில், இஸ்ரேல் நாட்டின் அறிமுகப்படுத்தப்பட்ட நெல்லுக்காக சொட்டு நீா்ப்பாசன முறைகள் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. பயிற்சி ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவித் தொழில்நுட்ப மேலாளா்கள் முருகன், குமணன் மற்றும் உதவி அலுவலா் ராஜா ஆகியோா் செய்திருந்தனா்.
முடிவில் விவசாயி ரவிச்சந்திரனின் வயலுக்கு விவசாயிகள் அழைத்து செல்லப்பட்டனா். நெற்பயிரில் ஏற்படும் சீதோஷண நிலை மாறுபாட்டால் வரக்கூடிய மகசூல் இழப்பு பற்றி செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...