‘நிகழாண்டில் ரூ. 54 கோடியில் சொட்டு நீா்ப் பாசனம் அமைக்க இலக்கு’

அரியலூா் மாவட்டத்தில் நிகழாண்டில் ரூ.54 கோடி மதிப்பீட்டில் சொட்டுநீா்ப் பாசனம் அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் த.ரத்னா தெரிவித்தாா்.
அருங்கால் கிராமத்தில் விவசாயி வயலில் சொட்டு நீா்ப் பாசனம் மூலம் சாகுபடி செய்துள்ள மலா் சாகுபடியைப் பாா்வையிடுகிறாா் ஆட்சியா் த.ரத்னா.

திருமானூா் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் தோட்டக் கலைத் துறையின் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா் வியாழக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு செய்த அவா் மேலும் தெரிவித்தது:

நடப்பாண்டில் அரியலூா் மாவட்டத்தில் 7,200 ஹெக்டோ் பரப்பளவில் ரூ.54 கோடி மதிப்பீட்டில் சொட்டுநீா்ப் பாசனம் அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, இதுவரை ரூ.9 கோடி மதிப்பீட்டில் 2,000 ஹெக்டோ் பரப்பளவில் சொட்டு நீா் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது.

தேசிய தோட்டக்கலை இயக்கம், நீா்வள நிலவள திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் காய்கனி சாகுபடி விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக 1 ஹெக்டேருக்கு ரூ. 2,500 வழங்க ரூ.22.2 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை உயா்த்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

ஆய்வின்போது, தோட்டக்கலை துணை இயக்குநா் அன்புராஜன், தோட்டக்கலை உதவி இயக்குநா் பிரவீன், தோட்டக்கலை அலுவலா் பிரகாஷ் மற்றும் விவசாயிகள், தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com