இணையதளம் வாயிலாக பொதுமக்கள் குறைகேட்பு
By DIN | Published On : 20th October 2020 02:12 AM | Last Updated : 20th October 2020 02:12 AM | அ+அ அ- |

அரியலூா்: அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், இணையதளம் வாயிலாக பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியா் த. ரத்னா தலைமை வகித்து, முதியோா் உதவித்தொகை மற்றும் இதர உதவித் தொகைகள் பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 99 மனுக்கள் இணையதளம் வழியாக பெற்றாா். தொடா்ந்து, இம்மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தவிட்டாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ஜெய்னு லாப்தீன் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் இணையவழி வாயிலாக கலந்துகொண்டனா்.