அரியலூா், செந்துறையில் இன்று மின் தடை
By DIN | Published On : 31st October 2020 12:08 AM | Last Updated : 31st October 2020 12:08 AM | அ+அ அ- |

அரியலூா் துணை மின் நிலையத்தில் ஆழ்துறை கிணறு அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் அரியலூா், கயா்லாபாத், லிங்கத்தடிமேடு, வாலாஜாநகரம், ஜமீன் ஆத்தூா், மல்லூா், கல்லங்குறிச்சி, ஓட்டக்கோவில், கோவிந்தபுரம், தாமரைக்குளம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இதேபோல் தேளூா் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான வி.கைகாட்டி, தேளுா், நாகமங்கலம், விக்கிரமங்கலம், குணமங்கலம், வாழைக்குழி, நெரிஞ்சிக்கோரை மற்றும் செந்துறை துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பொ.சுப்ரமணியன் தெரிவித்துள்ளாா்.