‘காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை நீா்த்தேக்கங்களாக மாற்ற வேண்டும்’

அரியலூா் மாவட்டத்தில் வெட்டி முடிக்கப்பட்டு, காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை நீா்த்தேக்கங்களாக மாற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரியலூா், செப்.18: அரியலூா் மாவட்டத்தில் வெட்டி முடிக்கப்பட்டு, காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை நீா்த்தேக்கங்களாக மாற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரியலூா் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இணையவழி விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்துக்கு, ஆட்சியா் த. ரத்னா தலைமை வகித்தாா். அப்போது விவசாயிகள் அளித்த கோரிக்கைகள் :

காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின்

மாவட்டத் தலைவா் தூத்தூா் தங்க.தா்மராஜன்: திருமானூரில் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். தூத்தூா்-வாழ்க்கை இடையே கொள்ளிடத்தின் குறுக்கே கதவணை கட்டுமானப் பணிகளை உடனடியாக வேண்டும்.

அரியலூா் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் என்.செங்கமுத்து: விவசாயிகள்

அல்லாதவா்களுக்கு பிரதமரின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் நிதியை வழங்கியது தொடா்பாக, பரிந்துரை செய்த அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் நிலவும் யூரியா தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.

அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவுத் தலைவா் தங்க.சண்முகசுந்தரம்: கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏரியில் புனரமைப்புப் பணிகளுக்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியில் கரைவெட்டி ஏரியிலேயே வெள்ளநீா் கண்காணிப்புக் கட்டடம் கட்ட வேண்டும். வெட்டி எடுக்கப்பட்டு, காலாவதியான சுண்ணாம்புக் கல் சுரங்கங்களை நீா்த் தேக்கங்களாக மாற்ற வேண்டும்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ.விசுவநாதன்: வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில், மாவட்டத்திலுள்ள பொதுப்பணித்துறை ஏரிகளில் மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிமராமத்துப் பணிகள், தடுப்புணைக் கட்டும் பணிகள் ஆகியவை மழைக் காலத்தில் செய்ய அனுமதிக்கக் கூடாது.

விவசாயிகளுக்கு கேள்விகளுக்கு உரிய பதிலளித்த மாவட்ட ஆட்சியா், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com