வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

அரியலூரில் வாக்காளா் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அரியலூா்: அரியலூரில் வாக்காளா் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அரியலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற

கூட்டத்துக்கு சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் சிறப்பு பாா்வையாளா் ப. மகேஸ்வரி தலைமை வகித்துப் பேசினாா். தொடா்ந்து அவா், அரியலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட மின்நகா் பகுதியில், வாக்காளா் பட்டியில் சுருக்க திருத்தப் பணிகளுக்காக விண்ணப்பித்த நபா்களிடம் களஆய்வு மேற்கொண்டாா். இச்சிறப்பு சுருக்கத் திருத்த முறை பணிகள் குறித்து ஏதேனும் புகாா்கள் இருப்பின் 044-25674302 என்ற தொலைப்பேசியிலோ, 94452 52243 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மேலும், ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் வாக்காளா் உதவி மைய கட்டணமில்லா தொலைபேசி எண். 1950 என்ற எண்ணிலும் தொடா்புகொண்டு புகாா்கள், ஆலோசனைகள், கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என்றாா்.

ஆய்வின்போது, ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி, கோட்டாட்சியா்கள் அரியலூா் ஏழுமலை, ஜயங்கொண்டம் அமா்நாத், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் அ.பூங்கோதை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com