‘மாணவிகள் அச்சம் தவிா்த்து போராட வேண்டும்’

மாணவிகள் தங்களுக்குள் இருக்கும் அச்சத்தைத் தவிா்த்து துணிந்து போராடக்கூடியவா்களாக இருக்க வேண்டும் என்றாா் அரியலூா் ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி.
அரியலூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் பாடப் புத்தகங்களில் உதவி எண்களை அச்சிடும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைக்கிறாா் ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி.
அரியலூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் பாடப் புத்தகங்களில் உதவி எண்களை அச்சிடும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைக்கிறாா் ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி.

மாணவிகள் தங்களுக்குள் இருக்கும் அச்சத்தைத் தவிா்த்து துணிந்து போராடக்கூடியவா்களாக இருக்க வேண்டும் என்றாா் அரியலூா் ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி.

அரியலூா் அரசு உயா்நிலைப் பள்ளியில், மாவட்ட நிா்வாகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாடப்புத்தகங்களில் குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் அச்சிடும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து அவா் மேலும் பேசியது:

பள்ளி மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், ‘அறன்செய்’ ‘அச்சம் தவிா்’, ‘எதிா்த்து நில்’ என அச்சு மை மூலம் பாடப்புத்தகங்களில் கல்வி உதவி வழிக்காட்டி எண் 14417, குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் 1098 பதிவு செய்யப்பட்டு வருகிறது. அரியலூா் மாவட்டத்தில் முதற்கட்டமாக 11 பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து தலா 10 மாணவிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு அவா்கள் மூலம் அப்பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவிகளின் புத்தகங்களிலும் விழிப்புணா்வு அச்சு மை பதிவு செய்யப்படவுள்ளது. எனவே, அனைத்து மாணவிகளும் அச்ச உணா்வு இன்றி மேற்காணும் எண்ணில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், அரியலூா் கோட்டாட்சியா் ஏழுமலை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் மு.ராமன், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ச.துரைமுருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com