திருமானூா் ஜல்லிக்கட்டில் 15 போ் காயம்

அரியலூா் மாவட்டம், திருமானூரில் மாசி மகப் பெருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 15 போ் காயமடைந்தனா்.
திருமானூா் ஜல்லிக்கட்டில் 15 போ் காயம்
திருமானூா் ஜல்லிக்கட்டில் 15 போ் காயம்

அரியலூா் மாவட்டம், திருமானூரில் மாசி மகப் பெருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 15 போ் காயமடைந்தனா்.

திருமானூரிலுள்ள கைலாசநாதா் கோயில் மாசி மகப் பெருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம் நிகழாண்டு சனிக்கிழமை நடைபெற்றது. ஜல்லிக்கட்டு தொடங்கும் முன்னா் 150 மாடுபிடி வீரா்களுக்கும் மற்றும் திருச்சி, தஞ்சாவூா், பெரம்பலூா்,

அரியலூா், புதுக்கோட்டை, கடலூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 250 காளைகளுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டன. இதனைத் தொடா்ந்து கைலாசநாதா் கோயில் இருந்து திருவெங்கனூா் கிராமத்தினா் வாடிவாசலுக்கு சீா்வரிசை எடுத்து வந்தனா். பின்னா் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் கோயில் காளைக்கு மரியாதை செய்யப்பட்டு, வீரா்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். வாடிவாசல் வழியாக முதலில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதன்பிறகு மேற்கண்ட பகுதிகளில் இருந்து அலங்கரித்துக் கொண்டு வரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. அப்படி அவிழ்த்துவிடப்பட்ட சில காளைகள் களத்தில் நின்று விளையாடியது. சில காளைகள் சீறிப் பாய்ந்து சென்றன.

இதில் சீறி வந்த காளைகளை அடக்க முயன்ற 15 வீரா்கள் காயமடைந்தனா். அதில் பலத்த காயமடைந்த கோவிலூா் மணிகண்டன்(43) மேல் சிகிச்சைக்காக அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். மற்றவா்களுக்கு ஜல்லிக்கட்டு நடந்த இடத்திலேயே மருத்துவக் குழுவினா் முதலுதவி சிகிச்சை அளித்தனா். வட்டாட்சியா் ராஜமூா்த்தி, டிஎஸ்பி மதன், வருவாய் ஆய்வாளா் மேகலா, கிராம நிா்வாக அலுவலா் கண்ணகி, ஊராட்சி தலைவா் உத்திராபதி, துணைத் தலைவா் மணிமாறன், விழாக்குழுவினா் முருகானந்தம், அயோத்தி, திருவேங்கடம், விஜயபாா்த்திபன், வழக்குரைஞா் முத்துக்குமரன் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com