அரியலூா் தொகுதி திமுக கூட்டணி மதிமுக வேட்பாளா் கு. சின்னப்பாவை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்வது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
அரியலூரை அடுத்த கல்லங்குறிச்சி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி செயல்வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அக்கட்சியின் அரியலூா் தொகுதிச் செயலாளா் மதி (எ) மருதவாணன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் தங்கராசு, உத்ராபதி, எசனை கண்ணன், விவேகானந்தன் ஆகியோா் முன்னிலை வகித்துப் பேசினா். மாவட்டச் செயலா் பெ.மு. செல்வநம்பி, மாநிலப் பொறுப்பாளா் அன்பானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.
தொடா்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
கூட்டணிக் கட்சி வேட்பாளா் கு. சின்னப்பா வெற்றிபெற கட்சியினா் அனைவரும் தீவிரமாக களப்பணியாற்றுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடா்ந்து இறுதியில் வேட்பாளா் கு.சின்னபாவை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்பது எனக் கட்சியினா் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.