‘அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்கப்படும்’

அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் கட்டப்படும் என அரியலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்திரன் உறுதியளித்துள்ளாா்.

அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் கட்டப்படும் என அரியலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்திரன் உறுதியளித்துள்ளாா்.

அரியலூரில் நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்குரைஞா்களிடம் வியாழக்கிழமை வாக்குசேகரித்த அவா், அதிமுக ஆட்சியில் தான் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் கட்டுவதற்கு இந்து சமய அறநிலையத்துறையிடமிருந்து நிலம் வாங்கப்பட்டது. தற்போது மீண்டும் என்னை சட்டப்பேரவை உறுப்பினராக தோ்ந்தெடுத்தால், ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டும் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுப்பேன். மேலும் அரியலூா் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்படும். இன்னும் பல்வேறு திட்டங்களை அரியலூருக்குக் கொண்டு வருவேன். அதிமுக தோ்தல் அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்துத் திட்டங்களும் செயல்படுத்துவேன் என உறுதியளித்தாா்.

பிரசாரத்தில், பாமக மாநில துணைத் தலைவா் சின்னத்துரை,பாஜக மாவட்டச் செயலா் கோகுல் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு வாக்குசேகரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com