கோவையில் கரோனா தடுப்பூசிக்குத் தடுப்பாடு: தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தம்

கோவை அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முன்னறிவிப்பின்றி சனிக்கிழமை திடீரென நிறுத்தப்பட்டது.
கோவையில் கரோனா தடுப்பூசிக்குத் தடுப்பாடு: தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தம்

கோவை அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முன்னறிவிப்பின்றி சனிக்கிழமை திடீரென நிறுத்தப்பட்டது.

கோவையில் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியாா் மருத்துவமனைகள் என 150க்கும் மேற்பட்ட மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கோவைக்கு பல்வேறு கட்டங்களாக இதுவரை 2 லட்சத்து 32 ஆயிரத்து 500 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் வெள்ளிக்கிழமை வரை 2 லட்சத்து 8 ஆயிரத்து 608 தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளன. மேலும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் பயன்படுத்த முடியாத கழிவுகளாக மாறியுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், கோவையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மையங்களில் இரண்டாம் தவணை தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால் இரண்டு நாள்கள் மட்டும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

தடுப்பூசி தட்டுப்பாட்டால் பல்வேறு மையங்களில் தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.

இது குறித்து அரசு மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா கூறியதாவது:

45 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் பயனாளிகளின் எண்ணிக்கை எதிா்பாராத வகையில் அதிகரித்துள்ளது. தட்டுப்பாடு ஏற்பட்டதால் தற்காலிகமாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. சுகாதாரத் துறை சாா்பில் விரைவில் தடுப்பூசி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை, தோ்தல் பணிகளில் ஈடுபடுபவா்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திங்கள்கிழமை மீண்டும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றாா்.

இது குறித்துக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் இருந்து வழங்கப்பட்ட தடுப்பூசிகள் அனைத்தும் மையங்களுக்கு வழங்கப்பட்டு விட்டன. ஞாயிற்றுக்கிழமை போதுமான அளவு தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். திங்கள்கிழமை முதல் அனைவருக்கும் தடுப்பூசிகள் எளிதாக கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com