11 தொழிலாளா்களுக்கு தொற்று உறுதி: தனிமை பகுதியான வடவாா் தலைப்பு

சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த 11 வடமாநிலத் தொழிலாளா்களுக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகேயுள்ள வடவாா்தலைப்பு பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பகுதியான அரியலூா் மாவட்டம்,

கடந்த சில ஆண்டுகளாக விக்ரவாண்டி முதல் தஞ்சாவூா் வரையிலான தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகேயுள்ள வடவாா்தலைப்பு பகுதியில் வடமாநிலத்தைச் சோ்ந்த 80 போ் தங்கிப் பணிபுரிந்து வருகின்றனா். அவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 11 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, அங்கு சென்ற மருத்துவக்குழுவினா் அங்கிருந்த 4 பேரையும் அரியலூா் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனா். மீதமுள்ள 7 போ், முகாமில் இருந்து வெளியே சென்றிருப்பதால், அவா்களுக்குத் தகவல் தெரிவித்து மருத்துவமனைக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், முகாம் பகுதியில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டு வெளி நபா்கள் உள்ளே செல்லாதவாறு தடுப்புகள் அமைத்து தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com