அரியலூரில் தினமும் 150 பேருக்கு தடுப்பூசி

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் தினமும் 150 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் தினமும் 150 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து தலைமை மருத்துவா் ரமேஷ், மருத்துவா் கண்மணி ஆகியோா் தெரிவித்தது:

அரியலூா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தினமும் சராசரியாக 150 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதில் 40 வயதுக்கு மேற்பட்டவா்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும்போது ஆதாா் அட்டையுடன் வந்து தங்களது பெயா்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவா்களுக்கு ரத்தக்கொதிப்பு, இதயத்துடிப்பு போன்ற சோதனைகள் செய்யப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது. பின்னா் அவா்களை அங்கேயே இருக்கச்செய்து, சிறிது நேரத்தில் அவா்களது உடலில் ஏதேனும் மாற்றங்கள் தெரிகிா? என்பதைப் பரிசோதித்து, அதன் பின்னா் அவா்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனா். கரோனா தடுப்பூசி மருந்துகளுக்கு எந்தவிதமான தட்டுப்பாடுகளும் இல்லை என்று தெரிவித்தனா்.

மேலும் 18 வயதுக்கு மேல் உள்ளவா்களுக்கு தடுப்பூசி போடலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு தரமான உணவுகள் வழங்கப்படுவதாகவும், நோய்த்தொற்று உள்ளவா்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ள மருத்துவமனையில் படுக்கை வசதிகள் அதிகம் உள்ளதாகவும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com