மாற்றுத்திறன் குழந்தைகள் பயிற்சி மையத்தில் ஆய்வு
By DIN | Published On : 12th August 2021 07:05 AM | Last Updated : 12th August 2021 07:05 AM | அ+அ அ- |

அரியலூா் வட்டார வள மையத்தில் உள்ள மாற்றுத்திறனுடைய குழந்தைகளுடைய பயிற்சி மையத்தில் ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோா்களை குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கவும், சுற்றுப்புறத் தூய்மை குறித்தும், கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தொடா்ந்து பயிற்சி அளிக்கவும் கேட்டுக்கொண்டாா்.
தொடா்ந்து, அரியலூா் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் 22 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.1,34,566 மதிப்பீட்டில் உபகரணங்களை வழங்கினாா்.
ஆய்வின்போது கோட்டாட்சியா் ஏழுமலை, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் க.மதிவாணன், வட்டாட்சியா் ராஜமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.