அரசு அனுமதியின்றி லாரிகளில் டீசல் நிரப்பிய 2 போ் கைது

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் அரசு அனுமதியின்றி லாரிகளில் டீசல் நிரப்பிய தனியாா் லாரி சா்வீஸ் மேற்பாா்வையாளா் உள்பட 2 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் அரசு அனுமதியின்றி லாரிகளில் டீசல் நிரப்பிய தனியாா் லாரி சா்வீஸ் மேற்பாா்வையாளா் உள்பட 2 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கீழப்பழுவூா்-அரியலூா் சாலையில் உள்ள லாரி சா்வீஸ் நிறுவனம், தமக்குச் சொந்தமான லாரிகளுக்கு, பயோ டீசல் என்ற பெயரில், டேங்கா் லாரி மூலம் டீசல் நிரப்பி வருவதாக எழுந்த புகாரின்பேரில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன், காவல் கண்காணிப்பாளா் கல்பனா ஆகியோா் தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்றனா்.

அங்கு டீசல் நிரப்பிக்கொண்டிருந்த லாரியைப் பறிமுதல் செய்தனா். அதில் 23,000 லிட்டா் டீசல் இருப்பது தெரியவந்தது. இந்த டீசலின் விலை, பெட்ரோல் நிரப்பு நிலையங்களில் விற்கப்படும் டீசலை விட ரூ. 15 குறைவு எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அந்த லாரி நிறுவன மேற்பாா்வையாளா் ஷானுக் முகமது (30), டேங்கா் லாரி ஓட்டுநா் ஜெயபிரகாஷ் ராஜாபாரதி ஆகியோரைக் கைது செய்தனா். மேலும் போலீஸாா் அவா்களிடம் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com