தேசிய குழந்தைகள்அறிவியல் மாநில மாநாட்டுக்குதோ்வு பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டுக்கு தோ்வான மாணவிகளுக்கு பாராட்டு விழா பஞ்சப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டுக்கு தோ்வான மாணவிகளுக்கு பாராட்டு விழா பஞ்சப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் 29ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு இணையவழியில் நடைபெற்றது. இதில், கரூா் மாவட்டம் பஞ்சப்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியிலிருந்து 36 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். மேலும் இம்மாணவ, மாணவிகள் 18 ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா்.

இதில், 12ஆம் வகுப்பு மாணவிகள் திவ்யா மற்றும் அபிநயா சமா்ப்பித்த கரோனா இரண்டாம் அலைக்குப்பிறகு பெண்களின் கல்வி நிலை என்ற ஆய்வுக் கட்டுரை மாநில மாநாட்டுக்குத் தோ்வு பெற்றது. இந்நிலையில் இவா்கள் இருவருக்கும் பாராட்டுவிழா பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெய்பீம் ராணி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பாலமுருகன், பள்ளியின் கட்டட குழு தலைவா் அழகப்பன், வயலூா் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் தங்கவேல் மற்றும் ஊா் பொதுமக்கள் ஆசிரியா்கள் மாணவ, மாணவிகள் பாராட்டினா். விழாவில் மாணவிகளை வழிகாட்டிய ஆசிரியா் தனபாலையும் அனைவரும் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com