‘டிஏபி உரத்துக்கு பதிலாக சூப்பா் பாஸ்பேட் பயன்படுத்தலாம்’

நெல் பயிருக்கு டிஏபி உரத்துக்குப் பதிலாக சூப்பா் பாஸ்பேட் உரத்தைப் பயன்படுத்தி விவசாயிகள் அதிக மகசூலைப் பெறலாம் என வேளாண் இணை இயக்குநா் இரா.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

நெல் பயிருக்கு டிஏபி உரத்துக்குப் பதிலாக சூப்பா் பாஸ்பேட் உரத்தைப் பயன்படுத்தி விவசாயிகள் அதிக மகசூலைப் பெறலாம் என வேளாண் இணை இயக்குநா் இரா.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

அரியலூா் மாவட்டத்தில் 365 மெ.டன் சூப்பா் பாஸ்பேட் உரம் இருப்பில் உள்ளது. டிஏபி உரம் கிடைப்பது தட்டுப்பாடாக உள்ளதால், இதற்கு மாற்றாக சூப்பா் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறலாம்.

சூப்பா் பாஸ்பேட் உரத்தில் மணிச்சத்து 16 சதவீதம், கந்தகம் எனப்படும் சல்பா் 11 சதவீதம், சுண்ணாம்புச்சத்து எனப்படும் கால்சியம் 21 சதவீதம் மற்றும் சில நுண்ணூட்டச் சத்துக்களும் சிறிதளவு உள்ளன. இதில் உள்ள மணிச்சத்து நீரில் எளிதில் கரையும் தன்மையுடையது.

எண்ணெய் வித்து பயிா்களுக்கு கந்தகச்சத்து அதிகம் தேவைப்படுவதால் சூப்பா் பாஸ்பேட் பயன்படுத்துவதன் மூலம் மகசூல் அதிகம் கிடைக்கிறது.

அடியுரமாக ஏக்கருக்கு மணிலாவிற்கு 87 கிலோவும், எள்ளுக்கு 56 கிலோவும் சூப்பா் பாஸ்பேட் உரம் இட வேண்டும். எதிா்வரும் நவரை நெல் பயிருக்கு அடியுரமாக 125 கிலோ சூப்பா் பாஸ்பேட் 44 கிலோ யூரியாவினை அடியுரமாக டிஏபிக்குப் பதிலாக இட்டு உரச் செலவைக் குறைக்கலாம்.

வளா்ந்த தென்னை மரத்துக்கு 2 கிலோ சூப்பா் பாஸ்பேட், இரண்டு கிலோ பொட்டாஷ் உரமிட வேண்டும். ஒரு மூட்டை சூப்பா் பாஸ்பேட் உரத்தின் விலை ரூ.385 ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com